பொது செய்தி

தமிழ்நாடு

அகஸ்தியம் பவுண்டேஷன்  நிறுவனருக்கு பாராட்டு விழா 

Added : டிச 03, 2019
Advertisement
 அகஸ்தியம் பவுண்டேஷன்  நிறுவனருக்கு பாராட்டு விழா 

பரங்கிப்பேட்டை:கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற, அகஸ்தியம் பவுண்டேஷன் நிறுவனர் ஈஷ்வர் ராஜலிங்கத்தை, கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., பாராட்டினார்.
பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஈஷ்வர் ராஜலிங்கம். இவர், அகஸ்தியம் பவுண்டேஷன் மூலம், பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இவரது, சேவையை பாராட்டி, ஜெர்மனி சர்வதேச அமைதி பல்கலைக்கழகம், புதுச்சேரியில், ஈஸ்வர் ராஜலிங்கத்திற்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. ஈஷ்வர் ராஜலிங்கத்திற்கு, சம்மந்தம் கிராமத்தில், பாராட்டு விழா நடந்தது. அகஸ்தியம் பவுண்டேஷன் நிர்வாகி, அர்ச்சனா ஈஷ்வர் தலைமை தாங்கினார். நிறுவனர் ஈஸ்வர் ராஜலிங்கம் வரவேற்றார். கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் பாண்டியன் எம்.எல்.ஏ., ஈஷ்வர் ராஜலிங்கத்தை, பாராட்டினார்.வரதன், பெருமாள், சீனு என்கிற ராமதாஸ், நயினா முகமது, கண்ணாதாசன், ரவி, ஒன்றிய அவைத் தலைவர் ராசாங்கம், செழியன், முன்னாள் ஊராட்சி தலைவர் ரங்கம்மாள், தில்லை சீனு பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X