பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திடீர் ரத்து மனு கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றம்

Added : டிச 03, 2019
Advertisement
 பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் திடீர் ரத்து மனு கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றம்

கடலுார்:கலெக்டர் அலுவலகத்தில், வாரம் தோறும் நடைபெறும் குறைதீர்வு கூட்டம், நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டதால், மனு கொடுக்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும். கலெக்டர் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார்.அதன்படி, நேற்று மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். நேற்று காலையில் மாநில தேர்தல் ஆணையம், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அப்போது முதல், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டதால், பொதுமக்களின் மனுக்கள் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொலை துாரத்தில் இருந்து வந்த பொதுமக்கள் பலர், மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

நேர்முக தேர்வு ரத்துகடலுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி செயலர் பதவிக்கான நேர்முக தேர்வுக்கு, நேற்று மதியம் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. விண்ணப்பித்தவர்கள் அசல் சான்றிதழ்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அலுவலக நோட்டீஸ் போர்டில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியானதையொட்டி, ஊராட்சி செயலர் நேர்முக தேர்வு ரத்து செய்யப்படுகிறது என ஒட்டப்பட்டிருந்தது. அதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X