கொடைக்கானல் - வத்தலக்குண்டு ரோட்டில் சீரமைப்புப்பணி எப்போது

Added : டிச 03, 2019
Advertisement


கொடைக்கானல் :கொடைக்கானல் - வத்தலக்குண்டு ரோட்டில் மண்சரிவு ஏற்பட்டு மாதங்கள் பல கடந்தும் சீரமைப்புப்பணி ஏனோ நடக்கவேயில்லை.சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு நாள்தோறும் ஏராளமான வாகனங்களில் பயணிகள் வருவது வழக்கம். சிலமாதங்களுக்கு முன் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததில் நகரில் தாழ்வான ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து தடுப்புச்சுவர்கள் சேதமடைந்து மண்சரிவு ஏற்பட்டது.வெள்ளி நீர்வீழ்ச்சி-பிரகாசபுரம் வரை ஐந்துக்கும் மேற்பட்ட இடத்தில் தற்காலிகமாக ஒளிரும் கயிறுகள் கட்டி, தடுப்புகள் மட்டுமே அமைத்தனர்.தற்போது வடகிழக்கு பருவமழையும் தொடர்ந்து பெய்து வருவதால் மெயின் ரோட்டில் பாதிப்பு இடத்தில் ராட்சத பிளவும், மண்சரிவும் அதிகரித்து விபத்து அபாயத்துடன் உள்ளது.கஜா புயலின் போது ஏற்பட்ட நிலச்சரிவுக்கு தற்காலிக மணல் மூடையே தீர்வு எனக்கருதி, அப்படியே விட்டுவிட்டனர். நிரந்தர சீரமைப்பு பணியை மேற்கொள்ளவில்லை. தற்போது பாதிப்புள்ள இடத்திற்கு மணல் மூடை கூட அடுக்க முடியாத நிதி நெருக்கடியில் நெடுஞ்சாலைத்துறை அல்லாடுகிறது. இதுகுறித்து கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் கூறுகையில், '' கொடைக்கானலில் மழையால் சேதமடைந்த ரோடுகள் குறித்த விவரம் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயலில் பாதித்த ரோடுகளும் நிதி வந்த பின் சீரமைக்கப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X