நெய்வேலி:என்.எல்.சி.,தொமுச அலுவலகத்தில், கடலூர் மேற்கு மாவட்டத்தில் நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக, தி.மு.க., சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்க்காணல் நடந்தது.கடலூர் மேற்கு மாவட்ட செயலர் கணேசன் தலைமை தாங்கினார். சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மற்றும் மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் நந்தகோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.கடலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மங்களுர், நல்லூர், விருத்தாசலம், பண்ருட்டி, அண்ணா கிராமம் உள்ளிட்ட ஒன்றியங்களில் இருந்து ஏராளமான தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.மாவட்ட பொருளாளர் பாவாடை கோவிந்தசாமி, என்.எல்.சி., தொ.மு.ச., தலைவர் வீரராமச்சந்திரன், பொது செயலர் சுகுமார், பொருளாளர் குருநாதன், அலுவலக செயலாளர் பாரி, நெய்வேலி நகர செயலாளர் பக்கிரிசாமி, உறுப்பினர்கள் நடராஜன், நன்மாற பாண்டியன், செந்தில், வழக்கறிஞர் சிலம்பரசன், மாவட்ட இளைஞரணி ராஜேஷ், நகர இளைஞரணி ஸ்டாலின், தொண்டரணி மணிவண்ணன், ஸ்டாலின் கலந்து கொண்டனர்.