மக்கள் குறைகளை  பெற மனு பெட்டி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மக்கள் குறைகளை  பெற மனு பெட்டி

Added : டிச 03, 2019

திண்டுக்கல் :திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகளை பெற மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.வாரந்தோறும் திங்கள் கிழமை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடக்கும். அதில் அனைத்து துறை முதன்மை அதிகாரிகளும் பங்கேற்று மனுக்களை பெற்று தீர்வு காண்பர். நேற்று உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த சமயத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடத்த கூடாது என மாநில தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அதனால் தேர்தல் முடியும் வரை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாது.இருப்பினும் பொதுமக்களின் அத்யாவசிய கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக மக்களின் குறைகளை பெறுவதற்கு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் வழங்கும் மனு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும் என, கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X