சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்து மாணவர்கள் காயம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
வத்தலக்குண்டு :வத்தலக்குண்டு அருகே ஒன்றிய துவக்க பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் காயம் அடைந்தனர். அதிகாரிகள் அலட்சியத்தால் பள்ளி கட்டடம் உறுதி இழந்து வருகிறது.வத்தலக்குண்டு ஒன்றியம் கோணியம்பட்டி துவக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு வரை ஓட்டுக் கட்டடத்திலும், 4,5ம் வகுப்புகளுக்கு காரை கட்டடத்திலும் நடக்கிறது. பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம்

வத்தலக்குண்டு :வத்தலக்குண்டு அருகே ஒன்றிய துவக்க பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இரண்டு மாணவர்கள் காயம் அடைந்தனர். அதிகாரிகள் அலட்சியத்தால் பள்ளி கட்டடம் உறுதி இழந்து வருகிறது.வத்தலக்குண்டு ஒன்றியம் கோணியம்பட்டி துவக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு வரை ஓட்டுக் கட்டடத்திலும், 4,5ம் வகுப்புகளுக்கு காரை கட்டடத்திலும் நடக்கிறது. பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என கிராமத்தினர் பலமுறை ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டனர். அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில் தொடர்ந்து 3 நாட்களாக இப்பகுதியில் மழை பெய்ததால் மேற்கூரை வலுவிழந்தது. நேற்று பள்ளி வேலை நேரத்தில் ஓடுகள் சரிந்ததில் 1ம் வகுப்பு மாணவர்கள் நாகலட்சுமி, கமலேஷ் காயம் அடைந்தனர்.இவர்களுக்கு விருவீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டது. ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X