கடலுார்,:சாரா தொழிலாளர்களுக்கான பிரதமரின் ஓய்வூதிய திட்டம், வர்த்தகர்கள் மற்றும் சுய தொழில் புரிபவர்களுக்கான தேசிய ஓய்வூதிய திட்டம் குறித்த விழிப்புணர்வு, பதிவு முகாம் நடந்தது.கடலுார் மாவட்ட தொழிலாளர் துறை சார்பில், ஓய்வூதிய வார விழாவை முன்னிட்டு, இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடந்த முகாமில், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜசேகரன், ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பு குறித்து விளக்கினார்.இத்திட்டங்கள் குறித்து விரிவான தகவல்களை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்திலும், இ-சேவை மையங்களிலும் தெரிந்து கொள்ளலாம் என்றார். தொழிலாளர் வைப்பு நிதி அலுவலர் சுந்தர்ராமன், உதவி கணக்கு அலுவலர் வினோத், இ- சேவை மைய ஒருங்கிணைப்பாளர் சரவணன் பேசினர்.தொழிலாளர் அலுவலக கண்காணிப்பாளர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE