பொது செய்தி

தமிழ்நாடு

மழைக்கால மீட்பு பணிக்கு தீயணைப்பு வீரர்கள் தயார்

Added : டிச 03, 2019
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள அபாய மீட்பு பணிக்கு தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.திண்டுக்கல்லில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நீர் நிலைகள், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள அபாய மீட்பு பணிகளை எதிர்கொள்ள 25 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.வெள்ளத்தில்

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள அபாய மீட்பு பணிக்கு தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.திண்டுக்கல்லில் சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நீர் நிலைகள், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள அபாய மீட்பு பணிகளை எதிர்கொள்ள 25 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளது.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்ல ரப்பர் படகு, மிதவை உபகரணங்கள், ஏணிகள், தீயணைப்பு கருவிகள் உட்பட மீட்பு பணிக்கு தேவையான கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் ஈடுபட 24 மணி நேரமும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் '101' இலவச எண் அல்லது 0451-2426701 ல் பேசலாம் என, நிலைய அலுவலர் சக்திவேல் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X