தமிழ்நாடு

திண்டுக்கல்லில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் ஊரக உள்ளாட்சிகளில் மட்டும்

Added : டிச 03, 2019
Advertisement

திண்டுக்கல், :உள்ளாட்சி தேர்தலையொட்டி திண்டுக்கல்லில் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.மாநில தேர்தல் ஆணையம் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சிகளில் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இதையொட்டி திண்டுக்கல்லில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை தவிர, மற்ற உள்ளாட்சிகளில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.எந்த அரசியல் கட்சியும், வேட்பாளரும் வெவ்வேறு மதத்தினர், சாதியினரிடையே வெறுப்புணர்வை உருவாக்கும் செயலில் ஈடுபடக் கூடாது. ஓட்டு பெறுவதற்காக சாதி, சமூக உணர்வுகளை துாண்டும் வகையில் நேரடியாக அல்லது மறைமுகமாக வேண்டுகோள் விடுக்க கூடாது. வாக்காளர்களுக்கு லஞ்சமோ, வெகுமதியோ கொடுக்க கூடாது. வாக்காளர் அல்லது அவரது ஆதரவாளரை வற்புறுத்துதல் அல்லது ஓட்டுரிமையில் தலையிடுதல் கூடாது. ஒரு வேட்பாளரின் வெற்றி வாய்ப்புகளை பாதிக்கும் நோக்கில் அவரது தனிப்பட்ட நடத்தை மற்றும் பண்பை பற்றி உண்மைக்கு புறம்பான அல்லது தவறான செய்தியை வெளியிட கூடாது.அரசியல் கட்சியினரோ, வேட்பாளரோ ஒரு தனி நபருடைய இடத்தில் அனுமதியின்றி கொடி கட்ட, வாசகங்கள் எழுத கூடாது. ஒரு கட்சி, பிற கட்சியின் கூட்டங்கள் நடக்கும் இடங்களின் வழியே ஊர்வலம் நடத்த கூடாது.கூட்டங்கள், ஊர்வலம் நடத்த தேர்தல் அதிகாரிகள் அல்லது போலீசிடம் அனுமதி பெற வேண்டும். தேர்தல் முடியும் வரை எத்தகைய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுதல், துவக்கி வைக்க கூடாது.உரிய அனுமதிகளை பெற்று களத்தில் ஏற்கனவே துவங்கப்பட்ட திட்ட பணிகளை மட்டும் தொடரலாம். தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வரும் முன்பே பெயர்களுடன் கண்டறியப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை தொடரலாம். இந்த விதிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு பொருந்தாது என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X