சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல், வடமதுரையில் பெண்களிடம் நகை பறிப்பு ஹெல்மெட் வாலிபர்களுக்கு வலை

Added : டிச 03, 2019
Advertisement



திண்டுக்கல் :திண்டுக்கல் என்.ஜி.ஓ.,காலனியைச் சேர்ந்த போக்குவரத்து கழக அலுவலர் சக்திவேல் மனைவி கவிதா 48. அவர் நேற்று காலை உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு தெருவில் நடந்து செல்லும்போது இருசக்கரவாகனத்தில் (ெஹல்மெட் அணிந்திருந்தனர்) வந்த 25வயது மதிக்கதக்க மர்மநபர்கள் இருவர் கவிதாவின் கழுத்தில் இருந்த 7பவுன் செயினைப் பறித்து தப்பிச்சென்றனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.வடமதுரை, அய்யலுாரில்: அய்யலுார் பாகாநத்தம் மலைப்பட்டியை சேர்ந்தவர் பொன்னம்மாள் 45. கொம்பேரிபட்டியில் பூக்கடை வைத்துள்ளார். நேற்று காலை 11:00 மணியளவில் உறவினர் ஒருவரது இருசக்கர வாகனத்தில் அய்யலுாருக்கு சென்றார். அங்கு எரியோடு பஸ் ஸ்டாப் அருகில் சென்றபோது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பொன்னம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்தனர். அரை பவுன் திருடனை கையிலும், 2.5 பவுன் நகை தரையிலும் விழுந்தது.நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் கீழே விழுந்த நகையை எடுக்க முயற்சிக்காமல் திருடர்கள் தப்பினர். அடுத்த அரை மணி நேரத்தில் வடமதுரையில் முத்துநகர் பிரிவு அருகில் திண்டுக்கல் ரோட்டில் நடந்த இ.பி.காலனியை சேர்ந்த சாந்தி என்பவரிடமும் ஹெல்மெட் அணிந்த இருவர் நகையை பறிக்க முயன்றனர். சாந்தி சுதாரித்து விலகி சென்றதால் நகை தப்பியது. இவ்விரு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை கொண்டு வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X