ஒட்டன்சத்திரம், ;
ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி முத்துச்சாமி. தனது தோட்டத்தில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மாலை கிணற்றின் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு ஒன்று 40 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்தது. கிணற்றில் 6 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால் மாடு உயிருடன் இருந்தது. ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் மாட்டை கயிற்றைகட்டி உயிருடன் மீட்டனர்.