தமிழ்நாடு

பென்னிகுவிக் மணிமண்டபத்தில் கண்காட்சி அமைக்க கோரிக்கை

Added : டிச 03, 2019
Advertisement

கூடலுார், லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் ஜன. 15 பிறந்தநாள் விழாவிற்குமுன், கண்காட்சி அமைக்க வேண்டும் என கூடலுார் மக்கள் மன்றத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பெரியாறு அணையைக் கட்டிய பென்னிகுவிக்கிற்கு லோயர்கேம்பில் மணிமண்டபம் உள்ளது. இங்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் நீண்ட தொலைவில் இருந்து வருவோர் புலம்பியபடியே செல்கின்றனர்.இந்நிலையில் கூடலுார் மக்கள் மன்றத்தினர் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அனுப்பியுள்ளனர். அதில், இந்த மணிமண்டபத்தில் குடிநீர், கழிப்பிட வசதியை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். ஜன. 15 ல் பென்னிகுவிக்கிற்கு கொண்டாடப்படும் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில், பென்னிகுவிக்கின் அரிய புகைப்படங்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், உள்ளிட்டவைகளை பார்க்க இங்கு கண்காட்சி அமைக்க வேண்டும்,' என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X