தேவதானப்பட்டி :
சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பையாதலைமை வகித்தார். துணைத்தலைவர் முத்துக்குமார் முன்னிலை வசித்தார். தலைமை ஆசிரியர் மோகன் வரவேற்றார்.தேனி நலம் மருத்துவமனை டாக்டர் ஜான்சி ராணி, மரக்கன்றுகளை நடவு செய்தார். 50க்கும் மேற்பட்ட பலவகை மரக்கன்றுகள் நடப்பட்டன. உதவி தலைமை ஆசிரியர் வெள்ளையன், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement