அரசியல் செய்தி

தமிழ்நாடு

பரங்கிப்பேட்டை சாலையை சீரமைக்கபா.ம.க., பொதுக்குழுவில் வலியுறுத்தல்

Added : டிச 03, 2019
Advertisement
 பரங்கிப்பேட்டை சாலையை சீரமைக்கபா.ம.க., பொதுக்குழுவில் வலியுறுத்தல்

விருத்தாசலம்:விருத்தாசலம் நகர் மன்ற தேர்தலில் அதிக உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்வது என, பா.ம.க., பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருத்தாசலத்தில் நகர பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. துணை பொதுச் செயலர் அசோக்குமார் தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி செயலர் டாக்டர் தமிழரசி, முன்னாள் நகராட்சி தலைவர் முருகன், முன்னாள் ஒன்றிய சேர்மன் செல்வராசு, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சிங்காரவேல் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலர் கார்த்திகேயன் வரவேற்றார்.மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி ஆலோசனை வழங்கினார். பசுமை தாயகம் மாவட்ட செயலர் வெங்கடேசன், துணை தலைவர் சேதுசுரேஷ், நகர தலைவர் ஏழுமலை, மணிகண்டன், வழக்கறிஞர் வெங்கடேசன், முன்னாள் நகர தலைவர் சீனிவாசன் பங்கேற்றனர்.வரும் ஜன., 4ம் தேதி பூம்புகாரில் நடக்கும் மகளிர் சங்க மாநாட்டில் விருத்தாசலம் நகரம் சார்பில் ஏராளமான மகளிர் பங்கேற்பது. உள்ளாட்சி தேர்தலில் விருத்தாசலம் நகர்மன்றத்தில் அதிக உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்வது, விருத்தாசலம் - பரங்கிப்பேட்டை நெடுஞ்சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்காவிட்டால், போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர செயலர் விஜயகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X