கனமழையால் நெற்பயிர்கள்... சாய்ந்தன: கவலையில் விவசாயிகள்

Added : டிச 03, 2019
Advertisement


கம்பம் : கனமழை காரணமாக கம்பம் பள்ளத்தாக்கில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன.இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.இப்பள்ளத்தாக்கில் நெல் சாகுபடி 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில்மேற்கொள்ளப்பட்டுள்ளது. பருவமழை உரிய நேரத்தில் பெய்யாததால்காலதாமதமாக சாகுபடி செய்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகபெய்து வரும் மழை, சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நெற் பயிர்கள்சாய்ந்து விட்டன. குறிப்பாக கம்பத்திலிருந்து காமயகவுண்டன்பட்டி செல்லும்ரோடு, சுருளிப்பட்டி ரோடு, மஞ்சகுளம், ஆங்கூர்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்பெரும்பாலான நெற்பயிர்கள் தலை சாய்ந்துள்ளன. மகசூல் பாதிக்கப்படும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.கம்பம் விவசாய சங்க செயலாளர் சுகுமாறன் கூறுகையில், ''சாகுபடி காலதாமதமாக துவங்கியதாலும், அதிக யூரியா மற்றும் உரங்கள் போட்டதாலும்கதிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. ஆனால் அறுவடைக்கு தயாரான நிலையில் மழையால் சாய்ந்துள்ளன.மீண்டும் மழை பெய்தால் அறுவடை செய்ய முடியாது. இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்புஏற்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X