பொது செய்தி

தமிழ்நாடு

நிலவேம்பு கஷாயம் வழங்கல்

Added : டிச 03, 2019
Advertisement

உத்தமபாளையம் ராயப்பன்பட்டியில் புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்.,முகாம் நடந்தது. தலைமையாசிரியர் மதலைமுத்துதலைமை வகித்து துவங்கி வைத்தார். முதன்மை கல்விஅலுவலர் ரேணுகாதேவி,மாவட்ட கல்வி அலுவலர் திருப்பதி பேசினர்.தெருக்களை சுத்தப்படுத்துதல், மரக்கன்று நடவு செய்வது, சுகாதார விழிப்புணர்வு,பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நிறைவாக நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் நடத்தப்பட்டது.ராயப்பன்பட்டி ஆரம்பசுகாதார நிலைய டாக்டர் எம்.கோபாலகிருஷ்ணன்தலைமையில் பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு, கஷாயம் வழங்கப்பட்டது.'டெங்கு' விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. டாக்டர் ஹர்ஷன் ராய், சுகாதார ஆய்வாளர் முருகன் ஏற்பாடுகளை செய்தனர்.இந்த முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் நேருராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை திட்ட அலுவலர் செபஸ்தியான், உதவி திட்ட அலுவலர் ஜாய்பீட்டர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X