அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,வுக்காக பயனாளிகள் அலைக்கழிப்பு

Added : டிச 03, 2019
Advertisement

வேப்பூர்:சிறுபாக்கம் பிர்கா திட்டப் பயனாளிகளை எம்.எல்.ஏ.,வுக்காக வருவாய்த் துறையினர் அலைக்கழித்ததால் அதிருப்தி அடைந்தனர்.

வேப்பூர் தாலுகாவில் முதல்வரின் சிறப்பு குறை தீர்வு முகாம் நடந்தது. இதில், பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, வேப்பூர், சிறுபாக்கம் பிர்காக்களில் திட்ட பயனாளிகளை, வருவாய் துறையினர் தேர்வு செய்தனர்.வேப்பூர் பிர்காவிற்கு கடந்த மாதம் 17ம் தேதி 31.49 லட்சம் மதிப்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஆனால், சிறுபாக்கம் பிர்கா பயனாளிகளுக்கு வழங்கவில்லை.இந்நிலையில், திட்டக்குடியில் நேற்று முன்தினம் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கல் நிகழ்ச்சியில், வேப்பூர் தாலுகாவின் சிறுபாக்கம் பிர்காவை சேர்ந்த 251 பயனாளிகளுக்கு, 52.47 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.வேப்பூர் தாலுகா உருவாகி கடந்த ஆறு ஆண்டுகளாக மனு நீதி நாள் முகாம், ஜமாபந்தியின் நலத்திட்ட உதவிகள் வேப்பூர் தாலுகாவில் வழங்கப்பட்டது. தற்போது, குறை தீர்வு முகாமிற்கு சிறுபாக்கம் பிர்கா திட்டப்பயனாளிகளை 37 கி.மீ., தூர திட்டக்குடிக்கு வரவழைத்து வழங்கினர். பயனாளிகளை அலைக்கழித்ததால் வருவாய் துறையினர் மீது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரி கூறுகையில், 'வேப்பூர் தாலுகா உருவாகிய பின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் வேப்பூர் தாலுகாவில் வழங்கப்பட்டது. இதில், சிறுபாக்கம் பிர்கா பயனாளிகள் வேப்பூரில் தாலுகாவில் நலத்திட்ட உதவிகள் பெற்றதால், திட்டக்குடி எம்.எல்.ஏ., கணேசனால், அப்பகுதி நலத்திட்ட உதவிகளை வழங்க முடியவில்லை. இது குறித்து எம்.எல்.ஏ., வருவாய் துறையினரிடம் அதிருப்தி தெரிவித்ததால், சிறுபாக்கம் பிர்காவின் முதல்வர் நலத்திட்ட உதவிகள் திட்டக்குடியில் வழங்கப்பட்டது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X