பொது செய்தி

தமிழ்நாடு

எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

Added : டிச 03, 2019
Advertisement

தேனி :தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சார்பில், உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன், கொடி அசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி நுழைவுவாயிலில் துவங்கி, வளாகத்தில் நிறைவு செய்யப்பட்டது.ஏ.ஆர்.டி., மையம், ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மையம், பால்வினை நோய் பிரிவு, ரத்த வங்கி ஆகிய தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு சங்க பணியாளர்கள் என, 350 பேர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.முன்னதாக நடந்த உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (காசநோய்) முருகன், துணை முதல்வர் எழிலரசன், டி.எஸ்.பி., சிவக்குமார், உதவி நிலைய மருத்துவ அலுவலர் ஈஸ்வரன், ஏ.ஆர்.டி., மைய கண்காணிப்பாளர் சையது பகாவுதீன் உசைனி, மாவட்ட திட்ட மேலாளர் முகமதுபருக், நுண்ணியல் துறை பேராசிரியர் லலிதா, டாக்டர் உமாமகேஸ்வரி, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மணிமொழி, ஏ.ஆர்.டி., மைய மருத்துவ அலுவலர்கள் மகேஸ்வரன், மகாலட்சுமி, நர்சிங் பயிற்சிக் கல்லுாரி துணை முதல்வர் சென்றாய பெருமாள், மருத்துவ மாணவர்கள், நர்சிங் மாணவிகள், தொண்டு நிறுவன பணியாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுபாட்டுச் சங்கப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X