தமிழ்நாடு

நுாலக புரவலரான பெரியகுளம் மணமக்கள்

Added : டிச 03, 2019
Advertisement

பெரியகுளம் :அரசு வேலை வாங்கித்தந்ததற்கு நன்றி செலுத்தும் விதமாக திருமணநாளில் மகமகன், புதுப்பெண்ணோடு பெரியகுளம் நுாலகத்திற்கு வந்து புரவலாக சேர்ந்து கொண்டனர்.பெரியகுளத்தைச் சேர்ந்தவர் வீரமகேந்திரன் 32. பெரியகுளம் தென்கரை நுாலகத்தில் போட்டித்தேர்வு பகுதியில் பயின்றார். தற்போது உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார். வீரமகேந்தினுக்கும், பொள்ளாச்சி லட்சுமிபிரசன்னாவிற்கும் 25, பெரியகுளத்தில் நேற்று முன்தினம் (டிச.1ல்) திருமணம் நடந்தது. தன்னை போட்டித்தேர்வில் வெற்றி பெற வைத்து, அரசு வேலை வாங்கித்தந்ததற்கு நன்றி செலுத்தும் வகையில், திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் நுாலகத்திற்கு வீரமகேந்திரன் வந்தார். தலா ஆயிரம் ரூபாய் செலுத்தி தங்களை புரவலராக இணைத்துக் கொண்டனர். நுாலகர்கள் சவடமுத்து, குமரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X