அரசியல் செய்தி

தமிழ்நாடு

5 ஆயிரம் முதியோருக்கு உதவித்தொகை: அமைச்சர் சம்பத் தகவல்

Added : டிச 03, 2019
Advertisement
 5 ஆயிரம் முதியோருக்கு உதவித்தொகை:  அமைச்சர் சம்பத் தகவல்

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் 5 ஆயிரம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என, அமைச்சர் சம்பத் பேசினார்.

கடலுார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் முதல்வர் சிறப்பு முகாமில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். அமைச்சர் சம்பத் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ராஜா கிருபாகரன், ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் ராஜகோபால சுங்ராவ் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் சம்பத் பேசுகையில், ' மாவட்டத்தில் முதல்வர் உத்தரவின் பேரில் நடந்த மனுக்கள் பெறும் சிறப்பு முகாமில் 56 ஆயிரம் மனுக்கள் வாங்கப்பட்டது. இதில் 35 ஆயிரம் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தற்போது 914 பேருக்கு இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. 1,136 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மேலும் 5 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X