தேனி, :தேனி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 130 ஊராட்சி தலைவர்கள், 1,161 வார்டு உறுப்பினர்களுக்கான இட ஒதுக்கீடு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது. 130 ஊராட்சிகளில் தலைவர்கள் பதவி ஒதுக்கீடு விபரம்:ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் தலைவர்கள் பதவிக்கு எஸ்.சி.பொது-4, எஸ்.சி.,பெண்-4, பெண் பொது-11, பொது -11, போடி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளில் எஸ்.சி. பொது-2, எஸ்.சி. பெண்-1,பெண் பொது-6, பொது-6, சின்னமனுார் ஒன்றியத்தில் 14 ஊராட்சிகளில் எஸ்.சி., பொது-2, எஸ்.சி. பெண்-2, பெண் பொது-5, பொது -5, கம்பம் ஒன்றியததில் 5 ஊராட்சிகளில் எஸ்.சி. பெண்-1, பெண் பொது-2, பொது- 2.க.மயிலாடும்பாறையில் உள்ள 18 ஊராட்சிகளில் எஸ்.சி.பொது-2, எஸ்.சி.பெண்-2, பெண் பொது-7, பொது-7, பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளில் எஸ்.சி., பொது-2, எஸ்.சி. பெண்-2, பெண்பொது-6, பொது-7, தேனி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளில் எஸ்.சி. பொது -3, எஸ்.சி. பெண்-3, பெண் பொது-6, பொது -6, உத்தமபாளையம் ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சிகளில் எஸ்.சி. பொது-1, எஸ்.சி. பெண்-1, பெண் பொது-6, பொது -5 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 1,161 ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்வு செய்ய வேண்டும். இதில் எஸ்.டி.பெண் -1, எஸ்.சி. பொது-156, எஸ்.சி. பெண்-175, பெண் பொது-442, பொது -434 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டுள்ளது.