வரத்துக்கால்வாயில் செல்லும் நீரின் அளவு குறைக்க வலியுறுத்தல்

Added : டிச 03, 2019
Advertisement

தேவதானப்பட்டி, :விளைநிலங்களில் தேங்குவதால் பெரியகுளம் ஒன்றிய கண்மாய்களுக்கு வரத்து கால்வாயில் செல்லும் தண்ணீரின் அளவை குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.இந்த ஒன்றியம் சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய், குள்ளப்புரம் பெரிய கண்மாய், ஜெயமங்கலம் வேட்டுவன் குளம் கண்மாய்களுக்கு வராக நதியில் வரும் நீர், மேல்மங்கலம் முத்தையா கோயில், வடுகபட்டி வெள்ளக்கரடு ஆகிய இடங்களில் தடுப்பணை கட்டி கால்வாய்கள் மூலம் கொண்டுவந்து நிரப்பப்படுகிறது.கடந்த சில நாட்களாக கண்மாய்கள் நிரம்பி வழிகிறது. அவற்றுக்கு நீர் கொண்டு செல்லும் வரத்துக்கால்வாய்களில் நீரின் அளவு அதிகமாக செல்கிறது. இதனால் அதையொட்டி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் ,வாழை ,கரும்பு வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக மறுகால்பட்டியில் 100 ஏக்கர் நெல் நடவு வயல்களில் நீர் தேங்கியுள்ளது. இதேபோன்று ஜெயமங்கலம், சில்வார்பட்டி கிராமங்களிலும் உள்ளது. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கண்மாய்களின் வரத்துக் கால்வாய்களில் செல்லும் நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X