சிதம்பரம்:சமூக நலத்துறை சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை, எம்.எல்.ஏ., பாண்டியன் நடத்தி வைத்தார்.சிதம்பரம் வாண்டையார் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் பழனி தலைமை தாங்கினார். பரங்கிப்பேட்டை வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அனிதா செந்தில் வரவேற்றார்.சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன், கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் வளையல், மஞ்சள் கயிறு, சேலை உள்ளிட்ட 11 பொருட்கள் வழங்கி வளைகாப்பு விழாவை நடத்தி வைத்தார். நகராட்சி கமிஷனர் சுரேந்தர் ஷா, முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், அ.தி.மு.க., நிர்வாகிகள் குமார், சுந்தர், சுரேஷ்பாபு, ராசாங்கம், விநாயகம், தன ஜெயராமன், கருணாநிதி, ஆறுமுகம், கணேஷ் பங்கேற்றனர். திட்ட அலுவலர் சுடர்கொடி நன்றி கூறினர்.