சேத்தியாத்தோப்பு:சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நவீன வாசக்டமி (என்.எஸ்.வி.,) குடும்ப நல அறுவை சிகிச்சை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கீரப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆண்டனிராஜ் தலைமை தாங்கினார். ஒரத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குமுதா முன்னிலை வகித்தார். சுகுமார் வரவேற்றார்.மருத்துவம் சாரா சுகாதார மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வன், சமுதாய சுகாதார செவிலியர் ராணி, சுகாதார மேற்பார்வையாளர் (பொறுப்பு) ராஜ்மோகன், பகுதி சுகாதார செவிலியர்கள் சரசு, மல்லிகா, சுகாதார ஆய்வாளர்கள் அழகேசன், பானுகோபன், சின்னையன், செந்தில்குமார் ஆகியோர் குடும்பநலம் குறித்து பேசினார்.கருத்தரங்கில், ஆண்களுக்கான தழும்பில்லாத கருத்தடை சிகிச்சையான வாசக்டமி (என்.எஸ்.வி.), பெண்களுக்கான லேப்ராஸ்கோபி கருத்தடை சிகிச்சை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.