பொது செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரத்து கொட்டும் மழையில் வந்த மக்கள் ஏமாற்றம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
சிதம்பரம்:சிதம்பரத்தில் நடக்க இருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், கொட்டும் மழையில் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.முதல்வர் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சிதம்பரம் வாண்டையார் திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. காலை லேசான மழை பெய்த நிலையிலும், நிகழ்ச்சி

சிதம்பரம்:சிதம்பரத்தில் நடக்க இருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால், கொட்டும் மழையில் வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

முதல்வர் குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சிதம்பரம் வாண்டையார் திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. காலை லேசான மழை பெய்த நிலையிலும், நிகழ்ச்சி ஏற்பாடு நடந்தது. 300 பேருக்கு பட்டாவும், 300 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை ஆணை வழங்குவதற்கு வருவாய்த்துறை ஏற்பாடு செய்திருந்தது.வி.ஏ.ஓ.,க்கள் சிதம்பரம் கிராம பகுதிகளில் இருந்து, 800க்கும் மேற்பட்டவர்களை, அழைத்து வந்து காலை 8:00 மணிக்கே திருமண மண்டபத்தில் அமர வைத்தனர்.

இந்நிலையில், காலை 10:00 மணிக்கு உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திடீரென ரத்து என அறிவிக்கப்பட்டது.இதனால், வருவாய்த்துறையினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. டீ கொடுத்து பொது மக்களை சமாதானம் செய்தனர். அவர்கள் புலம்பியவாறு வீட்டிற்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X