சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

Added : டிச 03, 2019
Advertisement
 குண்டர் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

சிறுபாக்கம்:சிறுபாக்கம் அருகே சாராய வழக்கில் கைதானவரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், கடந்த மாதம் 16ம் தேதி சிறுபாக்கம் பகுதியில் ரோந்து சென்றனர். ஒரங்கூர் - புலிகரம்பலுார் பிரிவு சாலை வந்த போது, சிறுபாக்கம் அடுத்த ஒரங்கூரை சேர்ந்த சுதாகர், 36; என்பவர் 120 லிட்டர் சாராயத்தை எடுத்து சென்றது தெரிய வந்தது.சிறுபாக்கம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது, சிறுபாக்கம் போலீஸ் ஸ்டேஷன், விருத்தாசலம் மது விலக்கு பிரிவில் 3 வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. அவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக, எஸ்.பி., ஸ்ரீஅபினவ் பரிந்துரையில், கலெக்டர் அன்புச்செல்வன் சுதாகரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X