சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நர்சிங் கல்லுாரி மாணவி தீக்குளித்து தற்கொலை

Added : டிச 03, 2019
Advertisement

பண்ருட்டி:நர்சிங் கல்லுாரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் மாவட்டம் அரசமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பன்.
இவரது மகள் பல்லவி, 20; இவர் செங்கல்பட்டுமாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில், 3ம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த சில மாதங்களாக,மனநலம் பாதித்த நிலையில், பல்லவி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.கடந்த 25ம் தேதி, பண்ருட்டி அடுத்த ஓரையூரில் உள்ள இவரது பாட்டி வீட்டில் தங்கியிருந்த போது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவரை மீட்டு, மேல்சிகிச்சைகாக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபன் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X