சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூதாட்டியை கொலை செய்ய முயற்சி

Added : டிச 03, 2019
Advertisement

திட்டக்குடி:வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை வெட்டி கொலை செய்ய முயற்சித்தது குறித்து, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

ராமநத்தம் அடுத்த மேலக்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி மனைவி பொன்னம்மாள்,75. இவரது மகன் செல்வராஜ். இவர் நெய்வேலியில் பணிபுரிந்து வருவதால், பொன்னம்மாள் தனியாக வசித்து வந்தார்.கடந்த 1ம் தேதி, பொன்னம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் மூதாட்டியின் தலையில் கத்தியால் வெட்டினார். தலையின் பின்பக்கம் மற்றும் இடதுபக்கத்தில் வெட்டுக்காயத்துடன் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். தகவலறிந்த போலீசார் பொன்னம்மாளை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பொன்னம்மாளின் மகன் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X