புகார் பெட்டி 

Added : டிச 03, 2019
Advertisement

சாலையில் கழிவு நீர் தேக்கம்
ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் 5 குறுக்கு தெருவில் அப்பார்ட்மென்ட் கழிவுகள் சாலையில் தேங்கி சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.-திருக்குமரன்,ரெட்டியார்பாளையம்.
மின்துறை கவனிக்குமா?
புதுச்சேரி மிலாது வீதி-சந்தாசாகிப் வீதி சந்திப்பில் உள்ள வீடுகளுக்கான மின் இணைப்பு பள்ளத்தில் தண்ணீர் தேங்குவதால் உயிர் பலி அபாயம் உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும்.-.அஜிதாம்பாள்,புதுச்சேரிசாலை.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
புதுச்சேரி பட்டேல் வீதி பழனிகிராமணி தோட்டத்தில் சிமென்ட் சாலை ஆக்கிரமிக்கப்பட்டு, சாலை குறுகி உள்ளது.சிவமணி, புதுச்சேரிதெருவிளக்கு எரியவில்லைகரிக்கலாம்பாக்கம் அடுத்த தணிக்குப்பம் ஏரிக்கரையில் மின் விளக்குகள் எரியவில்லை.-பச்சையப்பன், தணிக்குப்பம்.
கால்வாய் அடைப்பால் கழிவு நீர் தேக்கம்
தேங்காய்திட்டு மரப்பாலம் மின்துறை பின்புறம் உள்ள வசந்தம் நகர் 3-வது குறுக்கு தெருவில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் தேங்கி சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.-சுப்ரமணியன், தேங்காய்திட்டு.
நாய் தொல்லை கட்டுப்படுத்த வேண்டும்
சொக்கநாதன்பேட்டை, நடுத்தெருவில் நாய் தொல்லை அதிகமாக உள்ளதை கட்டுப்படுத்த வேண்டும்.-தேவி, புதுச்சேரி.
சாலையை சீரமைக்க வேண்டும்
மண்ணாடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.-பழனி, மண்ணாடிப்பட்டு.
தண்ணீர் தேங்குவதால் அவதி
கொம்பாக்கம் பாப்பாஞ்சாவடி சீனிவாசபுரம் தண்ணீர் தேங்கி சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது.-லில்லிரோஸ், பாப்பாஞ்சாவடி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X