காரைக்காலில் மழை பாதிப்பு

Added : டிச 03, 2019
Advertisement
 காரைக்காலில் மழை பாதிப்பு

காரைக்கால்;காரைக்காலில் ஏற்பட்ட மழை பாதிப்பு குறித்து அமைச்சர் கமலக்கண்ணன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

காரைக்கால் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நேற்று மாவட்டத்தில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கீதாஆனந்தன் எம்.எல்.ஏ., கலெக்டர் விக்ரந்தராஜா முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது குறித்தும், மழை நீரை வெளியேற்ற மேற்கொண்ட நடவடிக்கை, மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், பள்ளிகளில் சேதமடைந்த கழிப்பறை. குடிநீர் குழாய் மற்றும் கட்டடங்களை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடரப்பட்டது.கூட்டத்தில் துணை கலெக்டர் ஆதாஷ் மற்றும் பொதுப்பணித்துறை, கால்நடை, மின்துறை மற்றும் கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X