வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளர்கள்

Added : டிச 03, 2019
Advertisement
 வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளர்கள்

புதுச்சேரி:நிலுவை சம்பளம் வழங்க கோரி காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
குருமாம்பேட் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 64 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க கோரி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக நேற்று புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே காத்திருப்பு போராட்டம் நடத்தினர். ஏ.ஐ.டி.யூ.சி., சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு யோகேஷ்வரன், கதிரேசன், காளிதஸ், கந்தசாமி, உஷா தலைமை தாங்கினர். ஏ.ஐ.டி.யூ.சி.,மாநில பொதுச்செயலர் சேதுசெல்வம்போராட்டத்தை துவக்கி வைத்தார்.ஏ.ஐ.டி.யூ.சி.,மாநில செயலர் தினேஷ் பொன்னய்யா, துணை தலைவர்கள் கலியபெருமாள், முருகன், சந்திரசேகரன் வாழ்த்தி பேசினர்.போராட்டத்தை மாநில செயல் தலைவர் அபிேஷகம் முடித்து வைத்தார். காத்திருப்பு போராட்டத்தில் நிலுவை சம்பளத்தில் ஒரு பகுதியை உடனடியாக வழங்க வேண்டும்.தினக்கூலி ஊழியர்களாக 15 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.முதல்வர் நாராயணாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் தொழிலாளர்களை அழைத்து அனைத்து பிரச்னைக்கும் தீர்வு காண வேண்டும். அதுவரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என அறிவித்தனர். போராட்டத்தில் சிவசங்கரன், விநாயகமூர்த்தி, குப்புசாமி, வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இரண்டாம் நாளாக இன்று 3ம் தேதி காலை 9:00 மணி முதல்ஜென்மராக்கினி ஆலயம் அருகே காத்திருப்பு போராட்டம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X