வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டி மாற்றுத்திறனாளிகள் சட்டசபை நோக்கி ஊர்வலம்

Added : டிச 03, 2019
Advertisement
 வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டி மாற்றுத்திறனாளிகள் சட்டசபை நோக்கி ஊர்வலம்

புதுச்சேரி:கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சட்டசபை நோக்கி ஊர்வலம் சென்றனர்.வேலை வாய்ப்பில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். கடனுக்கு, மாதாந்திர உதவித் தொகையில் பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியறுத்தி மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டக்குழு சார்பில் சட்டசபை நோக்கி முற்றுகை ஊர்வலம் நடத்தினர்.சுதேசி மில் அருகே திரண்ட மாற்றுதிறனாளிகள் மறைமலையடிகள், அண்ணா சாலை, நேரு வீதி வழியாக சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு போராட்ட குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ராஜி, முத்துக்குமரன், கந்தசாமி, பன்னீர்செல்வம், மாறன், அந்தோணி முத்து, ரவி, ராஜா, லட்சுமணன், சுப்புராயன், சுமிலா தலைமை தாங்கினர்.மூன்று சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்ற மாற்றுத் திறனாளிகளை ஜென்மராக்கினி ஆலயம் அருகே எஸ்.பி.,மாறன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.
பின். முதல்வரின் தனி செயலர் ராஜமாணிக்கத்தை சந்தித்து,மாற்றுதிறனாளிகள் கடன் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என கடந்தாண்டு முதல்வர் நாராயணசாமி அறிவித்ததை அரசாணையாக வெளியிட வேண்டும். மாற்றுதிறனாளிகளின் உணவு தேவைக்காக வழங்கி வரும் உதவித் தொகையை கடன் வட்டிக்காக பிடித்தம் செய்ய கூடாது என மனு அளித்தனர்.இது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தனி செயலர் உறுதியளித்ததை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X