பொது செய்தி

இந்தியா

சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 03, 2019
Advertisement
 சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

பாகூர்,:பாகூர் - சேலியமேடு சாலையில் இருந்த மரம் வேரோடு பெயர்ந்து விழுந்ததால், மின் விநியோகம் தடைபட்ட நிலையில், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.பாகூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இதனால், பூமி ஈரப்பதமான நிலையில் உள்ளது. இந்நிலையில், பாகூர் - சேலியமேடு சாலையில் குடியிருப்புபாளையம் அருகே சாலையோரம் இருந்த மரம் ஒன்று நேற்று மதியம் திடீரென வேரோடு பெயர்ந்து மின் கம்பத்தின் மீது சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.இதில், மின் கம்பம் உடைந்ததால், அப்பகுதியில் மின் விநியோகம் தடைபட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனையடுத்து, பாகூர் மின் துறை இளநிலை பொறியாளர் பிரபுராம் தலைமையிலான ஊழியர்கள், அறுந்து கிடந்த மின் இணைப்புகளை சீரமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X