புதுச்சேரியில் குற்றங்களை தடுக்க ரோந்து பணியில் கூடுதல் போலீசார்

Added : டிச 03, 2019
Advertisement
 புதுச்சேரியில் குற்றங்களை தடுக்க ரோந்து பணியில் கூடுதல் போலீசார்

புதுச்சேரி:புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்க ரோந்து பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு, நேற்று முதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

புதுச்சேரியில் கொலை, வெடிகுண்டு கலாசாரம், போதை வஸ்துக்கள் விற்பனை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டிருந்தார்.மேலும், போலீஸ் ஸ்டேஷன்களை ஆய்வு மேற்கொண்ட கவர்னர் கிரண்பேடி, குற்ற சம்பவங்களை தடுக்க, ரோந்து பணியில் கூடுதல் போலீசாரை ஈடுபடுத்த கூறினார். ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசாரி்ன பணிகள் குறித்தும் ராஜ்நிவாஸ் அழைத்து பயிற்சியும் அளிக்கப்பட்டது.அதன்படி ஏற்கனவே குறைந்த எண்ணிக்கையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், சுமார் 600 போலீசார் கூடுதலாக இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு நேற்று முதல் பணியை துவக்கியுள்ளனர்.இந்நிலையில், சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால், ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார். நேற்று காலை ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற அவர், அனைத்து போலீசாரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் பணியில் ஈடுபட வேண்டும். ஒவ்வொருவரும் நாள்தோறும் தகவல் சேகரித்து அதை பதிவு செய்ய வேண்டும்.இதுதவிர பணியில் இருக்கும் போலீசார், அதற்கான பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும். தங்களின் உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார்.இதுகுறித்து ராகுல்அல்வால் கூறுகையில், ரோந்து பணியில் 150 போலீசார் மட்டுமே பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இனி, 750 பேர் ஈடுபட உள்ளனர். குறிப்பாக மகளிர் போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள் கல்லுாரி வாயில்கள், பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபடுவார்கள், பொதுமக்கள் ரோந்து போலீசாரிடம் தகவல்களை தெரிவிக்கலாம் என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X