புதுச்சேரி அமைச்சர் வீட்டுக்குள் குளம்! புதுச்சேரியில் அவலம்

Added : டிச 03, 2019
Advertisement
 புதுச்சேரி அமைச்சர் வீட்டுக்குள் குளம்! புதுச்சேரியில் அவலம்

புதுச்சேரி;அமைச்சர் கமலக்கண்ணனின் வீட்டுக்குள் மழை நீர் புகுந்து குளம்போல தேங்கியது.

கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், காரைக்காலை சேர்ந்தவர். அவர், புதுச்சேரியில் தங்கி பணியாற்றுவதற்காக, தீயணைப்புத் துறைக்கு அருகில் உள்ள வீடு ஒதுக்கி தரப்பட்டுள்ளது. வீடு மட்டுமல்லாமல், அமைச்சரின் அலுவலகமும் இங்கு செயல்படுகிறது.சமீபகாலமாக, மழை பெய்யும்போது, அமைச்சரின் வீட்டுக்குள் தண்ணீர் தேங்குவது வழக்கமாகி விட்டது. இதுதொடர்பாக, அமைச்சர் அலுவலக அதிகாரிகள் பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்தபோதும், பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால், அமைச்சரின் வீட்டுக்குள் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது. வீட்டுக்கு பின் பக்கத்தில் உள்ள ரயில்வே பாதையில் இருந்தும், முன் பக்கத்தில் உள்ள சாலையில் இருந்தும் தண்ணீர் புகுந்தது.வீட்டை சுற்றிலும் ஒரு அடி உயரத்துக்கும் மேலாக தண்ணீர் குளம் தேங்கியது. அமைச்சரின் படுக்கை அறை உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் புகுந்தது. மேலும், மேல் தளத்தில் இருந்தும், சுவர்களிலும் தண்ணீர் கசிவு ஏற்பட்டது.அதிர்ச்சி அடைந்த அமைச்சர் அலுவலக அதிகாரிகள், பொதுப் பணித் துறைக்கு தகவல் தெரிவித்தனர். டேங்கர் லாரிகள் வரவழைக்கப்பட்டு மோட்டார் மூலமாக தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது.வீட்டுக்குள் தேங்கிய தண்ணீரை ஊழியர்கள் அகற்றி வருகின்றனர். இருந்தபோதும், தண்ணீர் தொடர்ந்து கசிந்து வருவதால் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். வீட்டுக்குள் தண்ணீர் தேங்கிய தகவல் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால், அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரிக்கு வராமல், காரைக்காலிலேயே நேற்று தங்கி விட்டார்.புதிய வீடு ஒதுக்கப்படுமா?அமைச்சர் வீட்டில் உள்ளவர்கள் கூறும்போது, 'மழைக்காலங்களில் வீட்டுக்குள் தண்ணீர் பெருக்கெடுப்பது தொடர் கதையாக உள்ளது. அமைச்சருக்கு புதிய இடத்தில் வீடு ஒதுக்கி தருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வேதனையோடு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X