பொது செய்தி

இந்தியா

மத்திய அரசின் மகப்பேறு நல உதவி திட்டம்

Added : டிச 03, 2019
Advertisement
 மத்திய அரசின் மகப்பேறு நல உதவி திட்டம்

நெட்டப்பாக்கம்:புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, தாய் சேய் நலன் கருதி, 'பிரதான் மந்திரி மாத்துரு வந்தனா யோஜனா' என்கிற மத்திய அரசின் மகப்பேறு நல உதவி திட்டம் துவக்க விழா நேற்று ஏம்பலம் தனியார் மண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, சமூக நலத்துறை செயலர் ஆலிஸ்வாஸ் தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுது்துறை இயக்குனர் யஷ்வந்தையா முன்னிலை வகித்தார். சுகாதாரத்துறை குடும்ப நலம் இயக்குனர் அல்லிராணி, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம் மருத்துவ அதிகாரி திருமலை ஆகியோர் கருத்துரை வழங்கினார். அமைச்சர் கந்தசாமி, மகப்பேறு நல உதவித்திட்டத்தை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் ஏம்பலம், நெட்டப்பாக்கம் தொகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் ஊழியர்கள் மற்றும் மகளிர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X