பொது செய்தி

இந்தியா

சர்வதேச வாதநோய் மாநாடு

Added : டிச 03, 2019
Advertisement

புதுச்சேரி:இந்திய வாதவியல் சங்கத்தின் 35வது ஆண்டு மாநாடு வரும் 6ம் தேதி, ஜிப்மர் மருத்துவமனையில் நடக்கிறது.

இதுகுறித்து வாதவியல் மாநாட்டு குழு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ஜிப்மர் மருத்துவமனையில், வரும் 6ம் தேதி முதல் 8 ம் தேதி வரை, இந்திய வாதவியல் சங்கத்தின் 35வது ஆண்டு மாநாடு நடக்கிறது. இதில் குழந்தைகள், இளம்வயதினர், முதியவர்கள், பொதுமக்கள் என பத்து சதவீதத்திற்கும் அதிகமானவர்களை பாதிக்கும் வாதநோய் குறித்து விவாதிக்கப்படுகிறது.வாதநோய்க்கு, இந்தியாவில் தகுதி வாய்ந்த டாக்டர்கள் மற்றும் பயிற்சி வசதிகளுடன் ஒரு சில மையங்கள் மட்டுமே உள்ளன. இதன் விளைவாக, நோயாளிகள் முறையற்ற நோயறிதல், தாமதமாக நோயறிதல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், வாத நோய்க்கான சிறப்பு சிகிச்சை துறையில் ஜிப்மர் மருத்துவமனை, புகழ் பெற்றதாக விளங்குகிறது. மாநாட்டில் இந்தியா மற்றும் வெளி நாடுகளில் இருந்து 1200 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டில் வாத நோய்களை நிர்வகிப்பதில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து, நிபுணர்கள், பொது மருத்துவர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்களுக்கு விளக்குவதே இதன் நோக்கமாகும்.உலகின் மூன்று பெரிய வாதவியல் நிபுணத்துவ அமைப்புகளாகிய வாதவியல் அமெரிக்கா கல்லுாரி, வாத நோய்க்கு எதிரான ஐரோப்பிய லீக், ஆசியா பசிபிக் லீக் ஒருங்கிணைந்து நடத்தும் சர்வதேச சிம்போசியம் இந்த மாநாட்டின் முக்கிய அம்சமாகும்.இந்த மாநாடு சிம்போசியம் பட்டறை மற்றும் அறிவியல் அமர்வுகள் நுாற்றுக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களால் நடத்தப்படுகிறது.இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X