பொது செய்தி

இந்தியா

நிதி சார் கல்வி மையம் விழிப்புணர்வு முகாம்

Added : டிச 03, 2019
Advertisement
 நிதி சார் கல்வி மையம் விழிப்புணர்வு முகாம்

புதுச்சேரி:அரியாங்குப்பம் இந்தியன் வங்கி கிளைசார்பில், நிதி சார் கல்வி மையம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
அரியாங்குப்பம் காமராஜ் திருமண மண்டபத்தில் இந்தியன் வங்கி புதுச்சேரி மண்டல மேலாளர் வீரராகவன் அறிவுறுத்தலின் படி, நடந்த முகாமிற்கு துணை மண்டல மேலாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். அரியாங்குப்பம் கிளை மேலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். ஹூண்டாய் பொது மேலாளர் ராஜபாண்டியன், பயிற்சி நிறுவனத் தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் ஒய்வூதியம் மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் ரூ. 50 லட்சம் சிறு குறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டது. முகாமில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X