பாப்ஸ்கோ ஊழியர்கள் உண்ணாவிரதம்

Added : டிச 03, 2019
Advertisement
 பாப்ஸ்கோ ஊழியர்கள் உண்ணாவிரதம்

புதுச்சேரி;பாப்ஸ்கோ ஊழியர்கள் 27 மாத நிலுவை சம்பளம் வழங்க கோரி, உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.

பாப்ஸ்கோ ஊழியர்கள், தங்களுக்கு வழங்க வேண்டிய 27 மாத சம்பளத்தை உடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நுாறடி சாலை பாப்ஸ்கோ காய்கனி அலுவலகம் முன்நேற்று உண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுபட் டனர்.போராட்டத்திற்கு கூட்டமைப்பின் பொதுச் செயலர் கோவர்தனன், ரவி, சிவஞானவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலர் லட்சுமணசாமி, தலைவர் சேகர், பொறுப்பாளர்கள் சண்முகம், நடராஜன், கஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் பெண்கள் உள்பட நுாற்றுக்கும் மேற்பட்ட பாப்ஸ்கோ ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

நிலுவையில் உள்ள 27 மாத சம்பளத்தை உடனே வழங்க வேண்டும், மக்களுக்கு மாதந்தோறும் தரமான ரேஷன் அரிசி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குடிமை பொருள் வழங்கல் துறை நிறுவனத்திற்கு தர வேண்டிய ரூ. 17 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் நடந்தது.அரசு கோரிக்கையை தீர்க்கவில்லை எனில், வரும் 4ம் தேதி தலைமை தபால் நிலையம் எதிரில் ஆர்பாட்டம் நடத்த பாப்ஸ்கோ ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X