பொது செய்தி

இந்தியா

தனியார் படகு குழாம் அனுமதியை ரத்து செய்ய கோரிக்கை

Added : டிச 03, 2019
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில் தனியார் படகு குழாம் அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என, சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்துடன் இணைக்கப்பட்ட சுற்றுலா வளர்ச்சிக் கழக கேட்டரிங் மற்றும் நீர் விளையாட்டு ஊழியர் சங்கங்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.கேட்டரிங் சங்க பொதுச்செயலர் விஜயராகவன் தலைமை தாங்கினார். நீர் விளையாட்டு ஊழியர் சங்க பொதுச்செயலர் கஜபதி முன்னிலை வகித்தார். சம்மேளன அமைப்பு செயலர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.கூட்டத்தல், புதுச்சேரி சுண்ணாம்பாறு படகு குழாம் பேரடைஸ் கடற்கரையில் ரூ. 3.50 கோடி செலவில் கட்டப்பட்ட கட்டடங்களை தனியார் நிறுவனத்திடம் கொடுப்பதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, பி.டி.டி.சி., உணவகங்களை அங்கு இயங்க செய்ய வேண்டும், பேரடைஸ் கடற்கரையில் அரசுக்கு சொந்தமான பி.டி.டி.சி., உணவகங்கள் மற்றும் படகு சவாரி மட்டுமே இயக்க வேண்டும். தனியார் படகு துறையின் அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சுற்றுலாத் துறையின் புதுச்சேரி அரசின் தனியார்மய கொள்கையை முற்றிலும் கைவிட வேண்டும்பேரடைஸ் கடற்கரையில் தனியார் படகுகளையம், உணவகங்களை யும் அனுமதித்தால், அரசு ஊழியர் சம்மேளனம், அனைத்து அரசியல் அமைப்புகள் சமூக நல அமைப்புகள் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X