காணாமல் போன வாலிபர் வாட்ஸ் அப்  மூலம்  கண்டுபிடிப்பு | Dinamalar

 காணாமல் போன வாலிபர் வாட்ஸ் அப்  மூலம்  கண்டுபிடிப்பு

Added : டிச 03, 2019
  காணாமல் போன வாலிபர் வாட்ஸ் அப்  மூலம்  கண்டுபிடிப்பு

புதுச்சேரி:ஆறு மாதத்திற்கு முன் காணாமல் போன வாலிபரை வாட்ஸ் அப் மூலம் கண்டுபிடித்து முத்தியால்பேட்டை போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி, கிருஷ்ணா நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி கவிதா, 50. இவர்களது மகன்கள் தமிழ்மணி,21; மணிகண்டன்,20;சில ஆண்டிற்கு முன் மாணிக்கம் இறந்துவிட்டார். தாய் கவனிப்பில் மகன்கள் இருவரும் இருந்தனர். இந்நிலையில் கடந்த மே 30ம் தேதிமுதல் தமிழ்மணியை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். அதில், தமிழ்மணி காணாமல் போனது குறித்து, சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டார். அது வைரலானதை தொடர்ந்து, தமிழ்மணி கடலுாரில் உள்ள குளோபல் இல்லத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது.அதன்பேரில் போலீசார் கடலுார் விரைந்து சென்று, குளோபல் இல்லத்தில் இருந்த தமிழ்மணியை மீட்டு வந்து, அவரது தம்பி மணிகண்டன் மற்றும் உறவிர்களிடம் ஒப்படைத்தனர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X