காங்., நிர்வாகிகள் ஆலோசனை

Added : டிச 03, 2019
Advertisement

புதுச்சேரி:மத்திய அரசை கண்டித்து, டில்லியில் காங்., நடத்தும் பேரணியில் பங்கேற்பது தொடர்பாக, புதுச்சேரியில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
பா.ஜ., தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து, காங்., சார்பில் வரும் 14ம் தேதி டில்லியில் 'பாரதத்தை காப்பாற்றுங்கள்' என்ற பேரணி நடக்கிறது. டில்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதையொட்டி, புதுச்சேரியில் இருந்து போராட்டத்தில் யார், யார் பங்கேற்பது, எப்படி செல்வது உள்ளிட்டவை குறித்து நேற்று காங்., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.காங்., மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அகில இந்திய செயலர் சஞ்சய்தத் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். அமைச்சர்கள் ஷாஜகான், மல்லாடிகிருஷ்ணாராவ், அரசு கொறடா அனந்தராமன், தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X