இலவச அரிசிக்கான பணம் வழங்க வலியுறுத்தி பா.ஜ., வினர் குடிமைப்பொருள் அலுவலகம் முற்றுகை

Added : டிச 03, 2019
Advertisement
 இலவச அரிசிக்கான பணம் வழங்க வலியுறுத்தி பா.ஜ., வினர் குடிமைப்பொருள் அலுவலகம் முற்றுகை

புதுச்சேரி:இலவச அரிசிக்குரிய பணத்தை வங்கியில் செலுத்த வலியுறுத்தி, குடிமை பொருள் அலுவலகத்தை எம்.எல்.ஏ., தலைமையில் பா.ஜ., வினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் காங்., அரசு பொறுப்பேற்று ஆட்சிக்கு வந்த 40 மாதங்களில் தகுதியுள்ள ரேஷன் கார்டுகளுக்கு 23 மாதங்கள் அரிசி அல்லது அதற்குரிய பணம் வழங்கவில்லை. மேலும் அந்த பணத்தை வேறு துறைகளுக்கு மாற்ற திட்டம் போட்டுள்ளது. இதை கண்டித்தும், உடனடியாக 23 மாத தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த கோரி பா.ஜ., சார்பில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைமையில் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தட்டாஞ்சாவடியில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகம் முன்பு கூடினர். போலீசார் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர். போலீஸ் தடுப்பை மீறி, குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு பா.ஜ., பொதுச்செயலர் தங்க விக்ரமன், ரவிச்சந்திரன், மாநில தலைவர்கள் செல்வம், ஏம்பலம் செல்வம், துரை கணேசன், சோமசுந்தரம், நகர மாவட்ட தலைவர் அசோக்பாபு, உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அரசின் கவனத்திற்கு கோரிக்கைகளை கொண்டு செல்வதாக உறுதி அளித்தனர். அதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X