வாடிப்பட்டி, வாடிப்பட்டி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சியில் மக்கும் குப்பையை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் பயன்பாடின்றி சேதமடைந்துள்ளது.இக்கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பையை கொண்டு மண்புழு உரம் தயாரிக்க ஓராண்டிற்கு முன் தச்சம்பத்து ரோட்டில் ரூ. ஒரு லட்சம் செலவில், உரம் தயாரிப்பு தொட்டி அமைக்கப்பட்டது. தரமற்ற கட்டுமானத்தால் கூடம் சேதமடைந்து புதர்மண்டி உள்ளது. இதுபோன்ற திட்டங்களுக்கு அரசு ஒதுக்கும் நிதி, அதிகாரிகள் அலட்சியத்தால் வீணாகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.