தமிழ்நாடு

மாஜி ஊராட்சி தலைவி தீக்குளிக்க முயற்சி குறைதீர் கூட்ட அரங்கில் போலீசார் அதிர்ச்சி

Added : டிச 03, 2019
Advertisement

மதுரை: மதுரை கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்ட அரங்க வாசலில் கிண்ணிமங்கலம் முன்னாள் ஊராட்சி தலைவி விஜயராணி தீக்குளிக்க முயன்றது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.நேற்று வழக்கம் போல வாராந்திர குறைதீர் கூட்டத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. திடீரென ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதால், கலெக்டர் வினய் நேரடியாக மனு பெறவில்லை. சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் மனுக்களை கொடுக்க அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில் கூட்ட அரங்கிற்கு வந்த கிண்ணிமங்கலம் முன்னாள் ஊராட்சி தலைவி விஜயராணி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார், மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவரை மீட்டனர்.அவர் கூறுகையில், 'என் கிராமத்திற்கு சுடுகாடு இருந்தும், அங்கு செல்ல பாதை இல்லை. பல முறை வலியுறுத்தியும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. உடனே பாதைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றார். இதற்காக மனுவும் அளித்தார்.சக்கிமங்கலம் முறைசாரா கல்வி மைய 6வது தெரு பகுதியினர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள் அளித்த மனுவில், '1993ம் ஆண்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு சக்கிமங்கலம் கிராமத்தில் வீட்டுமனை வழங்கப்பட்டது. 25 ஆண்டுகளாகியும் இதுவரை பட்டா கிடைக்கவில்லை. கடந்த மாதம் மனு அளித்தோம். உடனடியாக பட்டா வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கிராமத்திற்கு வந்த ஆர்.ஐ., வி.ஏ.ஓ., பட்டா வழங்காமல் மிரட்டுகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டு இருந்தனர்.வலைச்சேரிபட்டி சரவணன் 30, கலெக்டர் வினய்யிடம் அளித்த மனுவில், மேலுார் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் கருங்காலக்குடியை தலைமையிடமாக கொண்டு தாலுகா அலுவலகம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால் கொட்டாம்பட்டியை தலைமையிடமாக கொண்டு தாலுகா உருவாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தாலுகாவை பிரிக்கும் செலவை தொழிற்சாலைகளை உருவாக்கி வேலை வாய்ப்பு தரவேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தினார்.கலெக்டர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த சிலர் மனு அளிக்காமலேயே திரும்பினர்.
சிக்கலில் போலீசார்கலெக்டர் அலுவலக வாசல் அல்லது அவரது கார் நிற்கும் இடத்தில்தான் தற்கொலை மிரட்டல் விடுப்பது வழக்கம். இதற்காக திங்கட்கிழமைதோறும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். ஆனால் நேற்று விஜயராணி எளிதில் மறைக்க முடியாத மண்ணெண்ணெய் கேனுடன் கூட்ட அரங்கு வாசலுக்கு வந்து தீக்குளிக்க முயன்றது போலீசாரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதுதொடர்பாக நுண்ணறிவு மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X