கல்லுாரி பேட்மிண்டன் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

Added : டிச 03, 2019
Advertisement
 கல்லுாரி பேட்மிண்டன் போட்டி  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

புதுச்சேரி;புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்புக் கல்லுாரிகளுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
கால்நடை மருத்துவக் கல்லுாரியின் உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இந்த போட்டிகளில் ஆடவர் பிரிவில் 18 கல்லுாரிகளும், மகளிர் பிரிவில் 12 கல்லுாரிகளும் கலந்து கொண்டன.ஆடவர் பிரிவில் சாரதா கங்காதரன் கல்லுாரி முதலிடத்தையும், காரைக்கால் அண்ணா கல்லுாரி இரண்டாவது இடத்தையும், புதுச்சேரி பொறியியல் கல்லுாரி மூன்றாவது இடத்தையும் பிடித்தன.மகளிர் பிரிவில் மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி, காரைக்கால் வேளாண் கல்லுாரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா, கால்நடை மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு, கல்லுாரி முதல்வர் ராம்குமார் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.போட்டிக்கான ஏற்பாடுகளை, பல்கலைக்கழக உடற்கல்வி உதவி இயக்குனர் சிவராமன், கால்நடை மருத்துவக் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் முகமது அசிம் ஆகியோர் செய்திருந்தனர். போட்டியின் நடுவராக பரத் பணியாற்றினார்.பல்வேறு கல்லுாரிகளின் உடற்கல்வி இயக்குனர்கள் சந்திரசேகர், ஜெய சிவராஜன், வெங்கடேசன், ஜேம்ஸ், ராஜவேல், தாமஸ், கிளாரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X