பொது செய்தி

தமிழ்நாடு

தயார் நிலையில் ஓட்டுப்பெட்டிகள்

Added : டிச 03, 2019
Advertisement

பேரையூர், :டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளும், சேடபட்டி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகளும் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிச., 27, 30ல் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து கட்சியினர், சுயேச்சைகள் முக்கிய பிரமுகர்களின் ஆதரவுகளை கேட்டு வீடுகளுக்கு படையடுக்க துவங்கிவிட்டனர். டி.கல்லுப்பட்டி யூனியன் அதிகாரிகள் கூறியதாவது: தேர்தலுக்கு முன் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தேவைப்படும் ஓட்டு பெட்டிகள் குறித்து கணக்கெடுக்கப்படும். கூடுதலாக தேவை என்றால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். மற்ற ஒன்றியங்களில், தேவைக்கு அதிகமாக ஓட்டு பெட்டிகள் இருந்தால், பற்றாக்குறையாக உள்ள ஊராட்சிகளுக்கு ஓட்டு பெட்டிகள் வழங்கப்படும். டி.கல்லுப்பட்டி யூனியனில் 148 வாக்குச்சாவடிகளுக்கு 314 ஓட்டு பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன.யூனியனில் 42 ஊராட்சி தலைவர், 13ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர், 279 ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி உள்ளது. 55,390 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 27,281 பேர், பெண்கள் 28,108 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர். தேர்தல் நடத்தும் அலுவலராக கமிஷனர் சவுந்திரராஜன் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் 42 பேர் உள்ளனர், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X