திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச.,10ல் மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது.சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன் எழுந்தருள, கொடியேற்றப்பட்டு பல்வகை திரவிய அபிஷேகம் நடந்தது. திருவிழா நம்பியார் சொக்கு சுப்ரமணிய சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.இன்று முதல் டிச.,9 வரை தினமும் காலை பல்வேறு வாகனங்களில் சுவாமி, தெய்வானை வீதி உலா சென்று அருள்பாலிப்பர். டிச.,9 பட்டாபிஷேகம், டிச.,10 காலை தேரோட்டம், மாலையில் மலைமேல் மகா தீபம், டிச., 11ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.