பேரையூர், பேரையூர் பகுதியில் மானாவாரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள துவரை செடிகளில் பூக்கள் மலர்ந்து காய்கள் பிடித்து வருகின்றன.சிலைமலைப்பட்டி, பாப்பையாபுரம், ராமநாதபுரம், அரசபட்டி, தெய்வநாயகபுரம், கூவலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விளை நிலங்களில் பருத்தி, பாசிப்பயிறுகளில் ஊடுபயிராக துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது செடிகளில் பூக்கள் பிடித்து காய்கள் சிறிய பிஞ்சுகளாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. காய்கள் பிடிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.