தமிழ்நாடு

தினமலர் - பட்டம் மெகா வினாடி வினா போட்டி கே.எம்.ஆர்., இன்டர்நேஷனல் - எம்.ஆர்.ஆர்., எம்.ஏ.வி.எம்.எம்., சத்திரிய நாடார்கள் பள்ளி மாணவர்கள் ஆரவாரம்

Added : டிச 03, 2019
Advertisement

மதுரை, ;தினமலர் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; அமெரிக்கா செல்' என்ற மெகா வினாடி வினா போட்டியில் மதுரை அச்சம்பத்து கே.எம்.ஆர்., இன்டர்நேஷனல், கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள எம்.ஆர்.ஆர்., எம்.ஏ.வி.எம்.எம்., மெட்ரிக் மற்றும் திருமங்கலம் சாத்தங்குடி சத்திரிய நாடார்கள் உயர்நிலை பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.மாணவர்கள் எதிர்காலம் கருதி தினமலர் நாளிதழ் 'பட்டம்' எனும் மாணவர் பதிப்பை வெளியிடுகிறது. பொது அறிவை வளர்க்கும் வகையில் பள்ளி அளவிலும், மாவட்ட மற்றும் மண்டல அளவிலும் தினமலர் பட்டம் மற்றும் கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடம் சார்பில் இந்த வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகின்றன.பள்ளிதோறும் நடக்கும் இப்போட்டியின் தொடர்ச்சியாக இந்த மூன்று பள்ளிகளிலும் நடந்த முதல்நிலை தேர்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்களுக்கு பொது அறிவு உட்பட 25 வினாக்கள் கேட்கப்பட்டு 20 நிமிடங்கள் தேர்வு நடந்தது. அதிக மதிப்பெண் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளியிலும் 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.கே.எம்.ஆர்., இன்டர்நேஷனல்இவர்கள் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். ஆசிரியை கியூபாகுயின் வினாடி வினா போட்டியை நடத்தினார். அதிக மதிப்பெண் பெற்று 9ம் வகுப்பு மாணவர்கள் வி.ஆகாஷ்ராஜ் - எம்.ஜெசியல் பிரைஸ்சன் ஜோடி வெற்றி பெற்றது.பரிசளிப்பு விழாவில் தினமலர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை தாளாளர் கிருஷ்ணவேணி வழங்கினார். முதல்வர் ஆனந்தவள்ளி முன்னிலை வகித்தார். முதல் சுற்றில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தேர்வு பெற்ற மாணவிகளுக்கு தினமலர் கேடயம் வழங்கப்பட்டது. போட்டியை ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.எம்.ஆர்.ஆர்., எம்.ஏ.வி.எம்.எம்., பள்ளிஆசிரியை ஜெயஸ்ரீ போட்டியை நடத்தினார். அதிக மதிப்பெண் பெற்ற பிளஸ் 1 மாணவர்கள் ச.பிரவீன் - வி. அபினேஷ் ஜோடி வெற்றி பெற்றது. பரிசளிப்பு விழாவில் தினமலர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை தாளாளர் கனகசுந்தரம் வழங்கினார். முதல்வர் அழகுமீனா, துணை முதல்வர் திலகவதி முன்னிலை வகித்தனர்.முதல் சுற்றில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தேர்வு பெற்ற மாணவிகளுக்கு தினமலர் கேடயம் வழங்கப்பட்டது. போட்டியை ஆசிரியைகள் லதா, வனிதா, சரவணப்பிரியா, ராதாலட்சுமி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.சத்திரிய நாடார்கள் பள்ளிஆசிரியர் திருப்பதி போட்டியை நடத்தினார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆர்.சந்தோஷ் சச்சின் (8ம் வகுப்பு) - கே.இந்துமதி (9ம் வகுப்பு) ஜோடி வெற்றி பெற்றது.பரிசளிப்பு விழாவில் தினமலர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை பள்ளி தலைவர் நடராஜன், செயலாளர் இளங்கோ வழங்கினர். தலைமை ஆசிரியை கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.முதல் சுற்றில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தேர்வு பெற்ற மாணவிகளுக்கு தினமலர் கேடயம் வழங்கப்பட்டது. போட்டியை ஆசிரியை சுமித்ரா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.இந்நிகழ்ச்சிகளை போத்தீஸ், வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், லோட்டே காபி பைட், குயின் மீரா இன்டர்நேஷனல் பள்ளி இணைந்து வழங்கின.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X